Monday, November 13

மழை, சென்னை மற்றும் சில சிந்தனைகள்

கடந்த வாரம் முழுவதும் மழை - அழகிய பருவக்காற்று மழை. பருவக்கற்று மழை என்றதும் எனக்கு தாகூரின் வாரத்தைக்கள் தான் ஞாபகத்திற்க்கு வருகின்றன. மழையை எழுவத்தில் வடிப்பதில் தாகூருக்கு இனை எவரும் இல்லை என நினைக்கிறேன். அவருடைய வார்ததைகளை மொழிமாற்றத்தின் மாசில்லாமல் வாசிப்பதிற்காக, வங்காள மொழியை கற்க வேண்டுமென அவ்வப்போது நினைப்பதும் உண்டு. இதோ, எனது துரு பிடித்த தமிழாக்கதில் தாகூரின் சில வார்த்தைகள்

மேகங்கள் வானத்தில் தடபுடல் சத்தம் செய்யதவாறு,
ஜூன் மாத மழை பொழியும் போது,
கீழக்கிலிருந்து வரும் உலர் காற்று விளையாத நிலங்களின் மீது படையெடுத்து,
மூங்கீல்களின் நடுவே நின்று வாத்தியங்களை முழங்குகின்றன.
எங்கிருந்தென்று எவருக்கும் தெரியாமல்,
தீடீறென வெளியே வரும் பூக்களின் கூட்டம்,
புற்களின் மீது நடனம் ஆடத் துவங்குகின்றன.
தாயே, பூக்கள் பூமிக்கடியில் பள்ளிக்கு செல்கிறதென நினைக்கிறேன்.
கதவை மூடிக் கொண்டு அவை பாடம் படிக்கின்றன;
பாடத்திற்க்கு முன் (பூமியை விட்டு) வெளியே செல்ல முயற்ச்தித்தால்,
வாத்தியார் (வகுப்பின்) ஓரத்தில் நிற்க வைத்து விடுகிறார்.
மழை வந்தால், பூக்களுக்கு விடுமுறை…

நல்ல வேளை, தாகூர் இன்றய பருவக்காற்று மழையை பார்க்கவில்லை. அதுவும் மழை பெயிது முடிந்தவுடன் சென்னை தி. நகர் ரங்கனதன் தெருவில் நடக்கும் சுழ்நிலை அவருக்கு எற்பட வில்லை. அங்கு அவருக்கு, சரவன செல்வரத்தினம் நகைக் கடையில் 916 தங்கத்திற்க்கு, கிராம் ஒன்றுக்கு 804 ரூபாய் விலையுடன் 5% extra கிடைத்திருந்தாலும், இந்த வார்த்தைகளை எழுதுவதற்க்கான ஊந்துதல் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். பிளாஸ்டிக் பூக்களை பற்றித் தான் எழுதியிருப்பார் தாகூர். ஆம், கடந்த சனி/ஞாயிறு வார இடவேளையில், சென்னையில் தி. நகர் ரங்கநாதன் தெருவிற்க்கு சென்றிருந்தேன். இந்த ஆண்டின் இலக்கியத்திற்க்காண நோபல் பரிசு வென்ற ஓர்ஹான் பாமுக் இந்தியா வந்த பொழுது, தான் மதுரையில் உணர்ந்தாக சொன்ன “glorious abundance of humanity” இந்த தெருவில் தினந்தோரும் பார்க்கலாம். சொல்லப் போனால், இந்தயாவில் எந்த பெரிய நகரத்தை கடந்தாலும், ஒரு முறையாவது இந்த உணர்வு ஏற்ப்படும்.

Dil Chahta Hai திரைப்படத்தில் Thanhayi என்ற பாடலில் நடிகர் ஆமிர்கான் நிற்க, அவரை சுற்றியுள்ள உலகம் - மனிதர்கள், வாகனங்கள் - வேகமாகச் செல்லும். ஆமிர் சிலை போல உரைந்திருக்க, மற்றவை VCR-இல் fast forward செய்தது போல அறக்க பறக்கச் செல்லும். தனிமையில், அழ்ந்த சிந்தனையில் ஆமிர் இருப்பதை அழகாக இயக்குனர் ஃபர்ஹான் அக்தர் கான்பித்திருப்பார். அதே சூழ்நிலை இயற்க்கையாகவே ஃபர்ஹானின் இயக்கமில்லாமல், ஷங்கர்-இஷான்-லாயின் இசை இல்லாமல், ஸ்ரீகர் பிரசாதின் editing இல்லாமல், இரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவும் இல்லாமல் தி. நகர் ரங்கனதன் தெருவில் அமைந்துள்ளது. அந்த தெருவில் ஒரு நிமிடம் நின்றிந்தால், நம்மை வேகமாக உரசிச் செல்லும் கூட்டம், நம்மை ஒரு ஆழ் சிந்தனை கடலில் மூழ்கடித்துச் செல்லும். இவ்வாறான இடங்களை, ஆழ்சிந்தனை சந்திப்புகளென நான் பேரிட்டுக்கொள்வேன். சென்னையில் இது போன்று பல இடங்கள் உள்ளன. சென்னை சென்ட்ரல் அது போல இன்னோரு இடம்.

சென்னைக்கும் எனக்கும் இன்னொறு உறவும் உண்டு : ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுது, மனதில் ஆழமான சிந்தனையை ஏற்படுத்தும் எதாவதொரு நிகழ்ச்சி நடக்கும். அந்த நிகழ்வு, அந்த பயணத்தை மறக்கமுடியாமல் செய்யும். இந்த முறை, இரயில் பயணத்தின் போது, பக்கத்து சீட்டுக்காரர் என் வேலை மற்றும் படிப்பை பற்றி விசாரித்தார். நானும் சும்மா பேச்சு கொடுத்தேன். விவரங்களைச் சொன்னேன். பேச்சு கொஞ்சம் வளர, தீடீரென்று, “நீங்க ஐயரா (Iyer) ?” என்று கேட்டார். 500 பக்கங்கள் தடிமனான ஆங்கில புத்தகத்தையை, நான் மிக மும்மூரமாகப் படித்துக் கொண்டிருந்ததை பார்த்து அவர் அவ்வாறு முடிவு செய்திருக்கலாம். இல்ல ஒரு வேளை, நான் நல்ல கல்லுரியில் படித்து,கொஞ்சம் பேர் பெற்ற நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அவர் அவ்வாறு முடிவு செய்திருக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும், இந்த கேள்வி ஒரு சக பயணியிடமிருந்து வருவது என்க்குப் புதிதல்ல. இதற்க்கு முன் என் பயணங்களில் பல முறை இந்த கேள்விக்கு கொஞ்சம் யோசித்து, இழுப்பறி செய்து, வேறு வழியில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால், முதல் முறையாக, சிரித்துக் கொண்டே “இல்லை”-திசையில் தலையாட்டினேன். மேலும் அவர், “ஐயர் இல்லன… நீங்க யாரு ?” ம்ம்ஹும்ம். நான் பல்லைக் காட்டிக் கொண்டு தலையாட்டுவதை நிறுத்தவில்லை. புரிந்து கொண்ட அவர், பேச்சை சிறிது நேரம் நிறுத்தி விட்டார். சாதி, குலம் போன்ற நம்முடைய சில கலாச்சார அடையாளங்களுக்கு இன்னும் உபயோகம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்த சம்பவம் அவைகளை நான் துறந்து விடுவதில் ஒரு சின்ன வெற்றி போல எனக்குத் தோன்றியது. அதற்க்கு மேலாக, இந்த “caste stereotyping”-கிற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு உணர்வு.சிறு சந்தோஷம்.

ஆனால், சென்னையில் என்னால் மறக்க முடியாத சம்பவம் 2003-இல் நடந்தது : சுதந்திர தினதின் போது, “தாம்பரம் - கடற்க்கரை” இரயிலில் வந்து கொண்டிருந்தேன். ஒரு தீ விபத்தில் தன் கணவனை பறி கொடுத்தாக, ஒரு பெண்மனி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பெண்மனிக்கு, பிளாஸ்டிக் தேசிய கோடிகளை விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவன், தன் கோடிகளைக் கொடுத்து, ” பிச்சை எடுக்காம, எதாவது தொழில் பன்னலாம்ல… இந்த கொடிய வித்து, காசு செத்துக்கோ” என்று சொன்னான். “Give a man a fish; you have fed him for today. Teach a man to fish; and you have fed him for a lifetime” என்ற ஆங்கில வாசகத்திற்க்கு இயக்குனர் பாக்கியராஜ் திரைக்கதை எழுதிய ஒரு காட்சியை பார்த்தது போல நான் உணர்ந்தேன் (ஆமாங்க, ஸீரியஸா தான்ங்க). இதல்லாம் சென்னையில தான் பார்க்க முடியும்.

அப்போ நீங்க கேக்கலாம் - “அப்படி சென்னை மீது அவ்வளவு லவ்வு இருந்தா, அங்க குடி போக வேண்டியது தானே!!!” இடம் பெயர்ந்தால், இவ்வாறு ஒவ்வொரு சம்பவத்தையும் நின்று சிந்தனை செய்ய முடியாது. தினமும் பார்த்து பார்த்து, அந்த நகரம் பழக்கமாகிவிடும். சென்னையுடனான என் உறவு முற்றிப் போகும். இந்தக் காதல் கல்யாணாமகி விடுட்டால், 90 நாட்களில் (ஆசைக்கு 60 மற்றும் மோகத்திற்க்கு 30) உறவு கசந்து விடும். அதனால் தான், சென்னக்கு நான் ஒரு வெளியுர்க்கார்னாக இருக்கிறேன். செல்லும் பொழுதெல்லாம் ஆட்டோவிற்க்கு 100-200 என்று அழுதாலும், அவ்வப்பொது இடம் தெரியாமல் தொலந்து போனாலும்(சென்னையில் அது கூட ஒரு சுகம் தான்!), இந்த சிந்தனை சந்திப்புகளின் விளைவுகளினால் எற்படும் சுகத்திற்க்காக முடிந்தவரை சென்னைக்கு வெளியுர்காரனாகவே இருந்து விட்டு போகிறேன்.

6 comments:

Sun said...

அழகாக எழுதியிருக்கிறீர்கள் :)

[ 'b u s p a s s' ] said...

மிகவும் நன்றாக எழுதியுள்ளிர்கள். நடையில் உள்ள Positive Note பதிவுக்கு அழகு சேர்க்கிறது.

அன்புடன்.

Anonymous said...

Nice writing. Briefly read a couple of others. Interesting post on Mac laptop.

-kajan

Anonymous said...

I am not surprised bout the caste stereotyping thingy still prevails with few our elder generation….that’s pathetic.
As u said Chennai has its own beauty and every single person who been there had some lasting memories, (am 1 among them)…
In short the whole article is intresting.

-Hareesh

Vijayan said...

Hi Pons,

Intresting stuff. But I have a feeling these types of good and bad are every where not only in Chennai. What do you feel?

Vijayan Srinivasan

sriram pons said...

For the lack of a Tamil editor, I will write the comment in English.
Actually, I am not trying to say whats good or bad. This is just about how I relate to the city of Chennai.

Whenever I visit a city that I haven't been frequently, I take lot of pains to act being a native of the City rather than be a tourist. I try not to stop and look around. I try to act as if nothing is new around me.

But in Chennai, I enjoy being a tourist, and a stranger. I like to keep the "new"ness of Chennai w.r.t me. Yes, it could not mean the same thing for some one else or for some other city. Hey, aren't we all free to choose what we really want to see ? ;)

thanks for all the comments - sun, buspass, kajan, hareesh and vijayan.