Friday, November 30

கற்றது தமிழ்.

கற்றத்து தமிழ் திரைப்படம் பார்த்தேன் - சுமார் ஒரு வாரத்திற்க்கு முன்பு. படம் பார்த்து முடிந்ததும், சினிமா விமர்சகர் ரே கார்னி திரைப்படங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று இங்கு சொல்வதைப் போன்றதொரு உணர்வு. இதோ அவருடைய வார்த்தைகள்..

Truth is messier and more complex than a trick. Art doesn't give us pre-cooked, pre-digested experiences, but raw, rough, unclassifiable ones. Real emotions defy verbal summaries. And they leave us more confused than analytic. In fact, if you can say what emotions you are feeling while you watch a film, you probably aren't having an emotional experience in the way I mean.
"உங்களை கல்லாக்கும் உணர்வுப் பொய்களை (emotional lies) வெளிக் கொண்டுவிடும்" என்று சொல்கிறரர் ரே. படம் பார்த்து எழுந்த சிந்தனைகள் பமுறுத்த செய்தன. எவ்வளவு தான் நீங்கள் தாங்குகிறீர்கள் பாக்கலாமென்று என்னைக் கேள்வி கேட்டன.

மீண்டும் மைப் பேனாவில் எழுதத் துவங்கினேன். பத்தரை வருட இடைவெளி்க்குப்பின் எழுதுகிறேன். நான்கு நாட்களுக்கு பின் தான் nib-ன் மூலம் எழுதிய என் எழுத்தில் நிதானம் வந்த்தது... ஆனால் சிந்தனையின் சலனம் இன்னமும் தெளியவில்லை.

No comments: