Sunday, September 24

மீண்டும் Mac

மீண்டும் Windows PC-லிருந்து Mac-ற்க்கு வந்து விட்டேன். இது என் தங்கையுடன் நடந்த ஒரு ஏற்ப்பாடு. இரண்டரை வருடத்திற்க்கு முன் நான் வாங்கிய Apple Mac Notebook என் தங்கையிடம் கொடுத்திருந்தேன். அந்த Notebook ஒரு அழகிய வெள்ளை நிற G3 800MHz iBook. Mac OS X 10.2 ஒடிக்கொண்டிருந்தது. அதை, என் ஒன்றரை வருட பழைய Windows XP ஒட்டிக்கொண்டிருக்கும் (கொஞ்சம் அசிங்கமான) Dell Inspiron (Intel Centrino 1.6 GHz) laptop-ற்க்கு பறிமாற்றம் செய்து கொண்டேன் - செய்ய வேண்டிய சூழ்நிலை. என் தங்கைக்கு, Mac-ல் Floppy disk இல்லை என்றும் VC++ programming செய்ய வசதிய்ல்லை என்றும் பிரச்சனை. முக்கியமாக Windows-ல் ஓடும் பல மென்பொருட்கள் Mac-ல் இல்லை என்று கோளாறு சொல்கிறாள். அடப் போங்கடா!! Microsoft வெண்ணைகளா!!! (நடிகர் வடிவேலு மதிறி ஒரு வசனம் எழுதலாமுனு ரொம்ப நேரம் யோசிச்சி 'வெண்ணை'யை தவுர வேற ஒன்னும் வர மாட்டிங்குது... அடி வாங்கினாதான் வரும் போல... இல்ல, அட்லீஸ்ட் பார்த்திபன் மதிரி யாராவது ஒரு ஆள் பக்கத்தில இருந்தா வரலாம்)


சரி, இப்ப iBook சங்கதியை பாக்கலாம். இந்த iBook-ஐ upgrade செய்ய, ஒரு 512 MB RAM-மும், மேக் ஓஸின் அதி நவீன பதிவான OS X 10.4-இன் ஒரிஜினல் டி.வி.டி ஒன்றும் வாங்கினேன். அந்த RAM-ஐ மாற்றுவதற்க்கு தேவையான 5 mm Philips screw driver, கோவில்பட்டியில் கிடைப்பதற்க்கு ஒரு வாரமானாலும், RAM-ஐ மாற்றி, OS X 10.4-யை இன்ஸ்டால் செய்வதற்க்கு, ஒரு மணி நேரமே ஆனது.


iBook துவங்குவதற்க்கும்(இயந்திரம் துவங்கி லாகின் திரை வரும் வரை - 45 நொடிகள்; லாகின் செய்ய - 15 வினாடிகள்) மற்ற Applications துவங்குவதற்க்கும் கொஞ்சம் அதிக நெரம் ஆனாலும், துவங்கிய பின் ஸிஸ்டம் வேகமாகவே செயல் படுகிறது. 800 MHz-இன் விளைவு வேகத்தில் சில நேரங்களில் தெரிந்தாலும், 640 MB நினைவகத்தை (Memory) OS X நன்றாகவே உபயோகித்து கொள்கிறது. Dashboard, Spotlight போன்ற OS X-இன் சிறப்பம்சங்கள் சிறப்பாக பணி செய்கின்றன. Unix-இன் பல அம்சங்கள் தினசரி காரியங்கள் செய்ய உதவியக உள்ளது. மென்பொறுள் தையார் செய்வதற்க்கு தெவையான பல டூல்கள் -Ruby, Perl, PHP, Applescript editor, மற்றும் XCode - ஓஸுடன் வருவதனால், வேறு எந்தச் செலவுமின்றி ஒரு முழுமையான Development system-ஆக செயல் படுகிறது.


இதை எல்லாவற்றையும் விட, இந்த Mac வேறு எந்த மென்பொறுளும் தனியக இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், தமிழ் கனினியாக செயல் படுகிறது. முரசு அஞ்சல் மென்பொருள் நிருவனத்தாரின் தமிழ் Keyboard ஊள்ளீட்டு முறைகளும்(Input Methods), இனைமதி என்றழைக்கபடும் தமிழ் Unicode Font-ம் ஓ.ஸுடனே வருகின்றன. எனவே, எந்த டாக்குமெண்டையும் தமிழில் கோர்ப்பது சுலபம். முரசு அஞ்சல் நிறுவனத்தினர் 'அஞ்சல்' மற்றும் 'தமிழ்99' என இரு keyboard உள்ளிட்டு முறைகள் உருவாக்கியுள்ளனர். அதில், 'அஞசல்' ஊள்ளீட்டு முறை மூலம் text editor-ல் தமிழ் வார்த்தைகளை Keyboard-ன் ஆங்கில எழுத்துக்களின் மூலமே கோர்க்க முடியும். அதாவது 'கில்மா' என்று editor-ல் எழுதுவதற்க்கு keyboard-ல் "gilmaa" என்று டைப் செய்தால் போதும். இதை Mac ஒ.ஸின் default editor-ஆன TextEdit மூல்மே செய்ய முடியும். ஏன்! இந்த blog post முழுவதையும் அதில் தான் எழுதினேன்!!!


மேற்கூரியவற்றை Windows-லேயே செய்ய முடியும். ஆனால், Mac OS இதற்க்கும் மேலே செல்கிறது. இதில் File-கள் மற்றும் Folder-களின் பெயர்களை தமிழிலிட முடியும்!!! அது மட்டுமில்லாமல், அந்த File-லில் உள்ளவற்றின் preview, File-களை List View-வில் பார்க்கும் போதும் தமிழ் வார்த்தைகள் சரியாகத் தெரிகிறது. (Windows-இலொ Linux-இலொ இதை செய்வது சாத்தியமா ? சாத்தியமகலாம். ஆனால் அதற்க்கு இரண்டு கிடாக்களை ஐய்யனாருக்கு காணிக்கையாக வெட்ட வேண்டுமென நினைக்கிறேன். ஹி..ஹி.. ) இதோ என் கனினியில் 'தமிழ்' என்ற folder-ல் உள்ள File-களின் list view...


file-names

ஆனால்,List view-வின் Previewவில் ஒரு text டாக்குமெண்ட் சரியாக தெரிவதற்க்கு அது Unicode UTF-16 encoding-ல் எழுத பட்டிருக்க வேண்டும். UTF-8-ல் இருந்தால் பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல தோற்றமளிக்கும்.(Unicode என்றால் என்ன ? UTF-8, UTF-16 எல்லாம் புதிதாக இருக்கிறதா ? இதோ ஜோயலின் ஒரு கட்டுரை! ஆங்கிலத்தில் இருக்கிறது. சமயம் கிடைக்கும் போது தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென ரொம்ப நாள் ஆசை. )


Spotlight என்பது Mac-ல் உள்ள ஒரு desktop தேடல் மென்பொருள். அது ஸ்டீராய்டுகள் அருந்திய Google Desktop Search என்று கூரலாம். மிக வெகமாகவும் துள்ளியமாகவும் செயல் படுகிறது. அதன் மூலம் தமிழ் டாக்குமெண்டுக்களையும் (UTF-16 encoding-ல் எழுதப்பட்டவை) தேட முடியும். இதோ என் 'காதல்' தேடலுக்கு Spotlight மூலம் வந்த தேடல் முடிவுகள் (search results).



Mac-ன் மற்ற சில applications-ஸினால் உருவாக்கப்பட்டவைகளைக்கூட Spotlight-ஆல் தேட முடியும். உதாரணத்திற்க்கு, Address Book-ல் உள்ள, எனது நன்பர் பழனியப்பனின் விலாசத்தை தேடும் பொழுது வந்த முடிவுகள்...


search-addr

அதை திறந்து பார்த்த பொழுது...


address-book

அவர் இந்தியவில் எதொ ஒரு தெருவில், எதொ ஒரு நகரதில், எதொ ஒரு மாநிலத்தில் வசிக்கிறார் என தெரிய வந்தது. நான் சொல்ல வந்தது என்னவென்றால், மற்ற Applications-ஸிலும் தமிழில் எழுத முடியும். இன்னொரு உதரனம் - சிக்குன் குன்யா நோயயை ஒழிக்க Stickies application மூலம், தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சகம் இப்படி ஒரு to-do list உருவாக்கி இருக்கலாம்.


stickies

எதிர்கால ஓ.எஸ். Unicode-ஐயும், Unicode தேடலையும் மையமாக் கொண்டிருக்குமென நான் நம்புகிறேன். எனவே, Mac OS X 10.4 எதிர் காலத்தை இன்றே கொண்டு வந்துவிட்டது என்று சொல்வது மிகையாகாது.

2 comments:

Rama Palaniappan said...

Nanba un porumai-ya paraat-taama irukka mudiyala :)

Sriram P C said...

Its not really difficult. It took just three times the average duration of a normal post. Anyways, I dont have anything else to do actually...;)