செல்ஃபோன் சிந்தனை
செல்ஃபோனின் இடஞ்சல்களால் ஏற்படும் எரிச்சல்கள், அதன் உபயோகங்களினால் ஏற்படும் சுகங்களை விட, அதிகமனு தான் சொல்லுவேன். அந்தச் சாதனம் ஒரு சுமையாத்தான் நான் நினைக்கிறேன். அதைப்பத்தி என் room mate ஷரத்தோடு ஒரு உறையாடல் ( converstation-ங்கற வார்த்தைய மொழிபெயரத்தா, உரையாடல்னு ரொம்ப formal வார்த்தையாடுச்சு. கலாச்சாரம் நம்ம மொழில எப்படி கலந்திருக்கு !)...
நான் : செல்ஃபோன்னால என்ன use ?
ஷரத் : செல்ஃபோன் வைச்சிகறது நமக்காக இல்ல. மத்தவங்க நம்மல contact பன்றதுக்காக.
நான் : அதுக்கு தான் வீட்டல ஃபோன் இருக்குதுல்ல...
ஷரத் : வீட்ட விட்டு வெளிய போனா, contact பன்றதுக்காக.
நான் : வீட்ட விட்டு வெளிய போறதே, மத்தவங்க நம்மல contact பன்ன கூடாதுங்றதுக்காக தான்.
அது அந்த வார்த்தையிலே இருக்குது. " விட்டு வெளியே போறது " - அப்படி விட்டு போறப்ப, அத்தன பேரையும் வீட்டுல விட்டு போக வேண்டியது தான்...
I used Kamban Software's Universal Editor (beta) to write this paragraph. Its good. I guess, it takes quite some time to get used to it.
No comments:
Post a Comment